ஆசிரியர் நாள் வாழ்த்து
ஆசிரியர் நாள் வாழ்த்து
அகரம் அறிமுகம் செய்து
சிகரம் தொடும்வரை
நகரா ஏணியாயிருந்து
மடமை தகரும் வரை
அறிவுப் பாலூட்டிப்
பழுதிலா வாழ்க்கைக்கு
வழுவிலா நெறியமைத்து
பத்திரமாய்க் கரம் பிடித்து
சிலையாய்ச் செதுக்கி
சிற்பமாய் அணியம் செய்து
செந்தமிழைச் செப்பமுறச்
செப்பும்வரை உதடசைத்து
ஓயாப் பயிற்சி தந்து
தரிசு நிலமாம் என்னைத்
பண்படுத்திப் பயனுறச் செய்ய
விழுமியங்களை விதைகளாக்கி
விழுநீர்ப் பாய்ச்சி
வீழ்விலாக் கல்வியூட்டிய
ஆசிரிய பெருமக்களுக்கு
ஆசிரியர் நாள் நல்வாழ்த்துகள்!
Comments
Post a Comment